நெகேமியா : 12

  • 1 : செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்த ஆசாரியரும் லேவியரும் யாரென்றால்: செராயா, எரேமியா, எஸ்றா,
  • 2 : அமரியா, மல்லூக், அத்தூஸ்,
  • 3 : செகனியா, ரெகூம், மெரேமோத்,
  • 4 : இத்தோ, கிநேதோ, அபியா,
  • 5 : மியாமின், மாதியா, பில்கா,
  • 6 : செமாயா, யோயாரிப், யெதாயா,
  • 7 : சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியருக்கும் தங்கள் சகோதரருக்கும் தலைவராயிருந்தார்கள்.
  • 8 : லேவியர் யாரென்றால்: யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவன் சகோதரரும் துதிசெய்தலை விசாரித்தார்கள்.
  • 9 : பக்புக்கியா, உன்னி என்கிற அவர்கள் சகோதரர் அவர்களுக்கு எதிரே காவல்காத்திருந்தார்கள்.
  • 10 : யெசுவா யொயகீமைப் பெற்றான், யொயகீம் எலியாசிபைப் பெற்றான். எலியாசிப் யொதாவைப் பெற்றான்.
  • 11 : யொயதா யோனதானைப் பெற்றான், யோனத்தான் யதுவாவைப் பெற்றான்.
  • 12 : யொயகீமின் நாட்களிலே பிதாவம்சங்களின் தலைவரான ஆசாரியர்கள் யாரென்றால்: செராயாவின் சந்ததியில் மெராயா, எரேமியாவின் சந்ததியில் அனனியா,
  • 13 : எஸ்றாவின் சந்ததியில் மெசுல்லாம், அமரியாவின் சந்ததியில் யோகனான்,
  • 14 : மெலிகுவின் சந்ததியில் யோனத்தான், செபனியாவின் சந்ததியில் யோசேப்பு,
  • 15 : ஆரீமின் சந்ததியில் அத்னா, மெராயோதின் சந்ததியில் எல்காய்,
  • 16 : இத்தோவின் சந்ததியில் சகரியா, கிநெதோனின் சந்ததியில் மெசுல்லாம்,
  • 17 : அபியாவின் சந்ததியில் சிக்ரி, மினியாமீன்மொவதியா என்பவர்களின் சந்ததியில் பில்தாய்.
  • 18 : பில்காவின் சந்ததியில் சம்முவா, செமாயாவின் சந்ததியில் யோனத்தான்,
  • 19 : யோயரிபின் சந்ததியில் மத்தனா, யெதாயாவின் சந்ததியில் ஊசி,
  • 20 : சல்லாயின் சந்ததியில் கல்லாய், ஆமோக்கின் சந்ததியில் ஏபேர்,
  • 21 : இல்க்கியாவின் சந்ததியில் அசபியா, யெதாயாவின் சந்ததியில் நெதனெயேல் என்பவர்கள்.
  • 22 : எலியாசிபின் நாட்களில் யொயதா, யோகனான், யதுவா என்கிற லேவியர் பிதா வம்சங்களின் தலைவராக எழுதப்பட்டார்கள்; பெர்சியனாகிய தரியுவின் ராஜ்யபாரமட்டும் இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டார்கள்.
  • 23 : லேவி புத்திரராகிய பிதா வம்சங்களின் தலைவர் எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் நாட்கள்மட்டும் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதப்பட்டார்கள்.
  • 24 : லேவியரின் தலைவராகிய அசபியாவும், செரெபியாவும், கத்மியேலின் குமாரன், யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்கள் சகோதரரும், தேவனுடைய மனுஷனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும் தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக முறைமுறையாயிருந்தார்கள்.
  • 25 : மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் என்பவர்கள் வாசல்களிலிருக்கிற பொக்கிஷ அறைகளைக் காவல்காக்கிறவர்களாயிருந்தார்கள்.
  • 26 : யோத்சதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரன் யொயகீமின் நாட்களிலும், அதிபதியாகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள்.
  • 27 : எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணுகையில், துதியினாலும் பாடலினாலும், கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள்.
  • 28 : அப்படியே பாடகரின் புத்திரர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியரின் கிராமங்களிலும்,
  • 29 : பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலும் இருந்துவந்து கூடினார்கள்; பாடகர் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் கட்டியிருந்தார்கள்.
  • 30 : ஆசாரியரும் லேவியரும் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, ஜனத்தையும் பட்டணவாசல்களையும் அலங்கத்தையும் சுத்தம்பண்ணினார்கள்.
  • 31 : அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.
  • 32 : அவர்கள் பிறகாலே ஒசாயாவும், யூதாவின் பிரபுக்களில் பாதிப்பேரும்,
  • 33 : அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,
  • 34 : யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா என்பவர்களும்,
  • 35 : பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியரின் புத்திரரில் ஆசாப்பின் குமாரன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்குக் குமாரனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் குமாரன் சகரியாவும்,
  • 36 : தேவனுடைய மனுஷனாகிய தாவீதின் கீதவாத்தியங்களை வாசிக்கிற அவன் சகோதரரான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனேயேல், யூதா, அனானி என்பவர்களும் போனார்கள்; வேதபாரகனாகிய எஸ்றா இவர்களுக்கு முன்பாக நடந்தான்.
  • 37 : அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான ஊருணிவாசலுக்கு வந்தபோது, அலங்கத்தைப்பார்க்கிலும் உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின்மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசல்மட்டும் போனார்கள்.
  • 38 : துதிசெய்கிற இரண்டாம்கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாய் நடந்துபோனார்கள், அவர்கள் பிறகாலே நான் போனேன்; ஜனத்தில்பாதிப்பேர் அலங்கத்தின்மேல் சூளைகளின் கொம்மையைக் கடந்து, அகழ் மதில்மட்டும் நெடுகப்போய்,
  • 39 : எப்பிராயீம் வாசலையும், பழைய வாசலையும், மீன் வாசலையும், அனானெயேலின் கொம்மையையும், மேயா என்கிற கொம்மையையும் கடந்து, ஆட்டுவாசல்மட்டும் புறப்பட்டுக் காவல்வீட்டு வாசலிலே நின்றார்கள்.
  • 40 : அதற்குப்பின்பு துதிசெய்கிற இரண்டு கூட்டத்தாரும் தேவனுடைய ஆலயத்திலே வந்து நின்றார்கள்; நானும் என்னோடேகூட இருக்கிற தலைவரில் பாதிப்பேரும்,
  • 41 : பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா என்கிற ஆசாரியர்களும்,
  • 42 : மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகரும், அவர்கள் விசாரிப்புக்காரனாகிய யெஷரகியாவும் சத்தமாய்ப் பாடினார்கள்.
  • 43 : அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினாலே மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.
  • 44 : அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதல் கனிகளையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்படியே வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்க்கும்படிக்கு, சில மனுஷர் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்மேலும் லேவியர்மேலும் யூதா மனிதர் சந்தோஷமாயிருந்தார்கள்.
  • 45 : பாடகரும், வாசல் காவலாளரும், தாவீதும் அவன் குமாரனாகிய சாலொமோனும் கற்பித்தபடியே தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்.
  • 46 : தாவீதும் ஆசாப்பும் இருந்த பூர்வநாட்களில் பாடகரின் தலைவரும் வைக்கப்பட்டு, தேவனுக்குத் துதியும் தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் திட்டம்பண்ணப்பட்டிருந்தது.
  • 47 : ஆகையால் செருபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியருக்கென்று பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்; லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்கைப் பிரதிஷ்டைபண்ணிக்கொடுத்தார்கள்.
மேல்